
பரீட்சை காரணமாக சிறு காலம் இணையத்திற்கு வரேலாம போய்ட்டுது.இப்ப யாழ்ப்பாணத்தில ஸ்கைப்(skype) பயன்படுத்தும் இணைய பாவனையாளர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.இப்ப கொஞ்சம் ஸ்கைப்(skype) பற்றி பார்ப்பம்.
ஸ்கைப் (Skype) என்பது கணினி வழியாக ஒலிவடிவிலும் எழுத்துவடிவிலும் ஒரே நேரத்தில் பலரும் கலந்துரையாடவல்ல ஒரு வலைமைப்பு ஆகும். இதனை மூடிய Peer-to-peer முறையில் இயங்கும் இணையத் தொலைபேசி, தொலைஎழுது வலையமைப்பு ஆகும். இந்த மென்பொருளானது பல்வேறு பாதுக்காப்புத் தடுப்புகள் கொண்டதும் மற்றும் NAT ஊடாக ஒலியழைப்புக்கள் சிறு பொதிகளாக்கப் பட்டு வேறு கணினி மென்பொருட்களுடன் சேர்த்து அனுப்பப்படும் அமைப்பு கொண்டது. ஒரு 'ஸ்கைப் பயனர் பிறிதோர் ஸ்கைப் பயனருடன் அல்லது ஸ்கைப்பில் குழு உரையாடலிலும் (ஒலி சார்ந்த உரையாடல்களிற்கு 5 பேரிற்கு மிகையாகமல்) முற்றிலும் இலவசமாக உரையாட முடியும். இது தவிர விண்டோஸ் XP பயனர்கள் இணைய ஒளிப்படக் கருவி (web camera) இருப்பின் அழைக்கபட்டவர்களைப் பார்த்துக் கொண்டே உரையாடமுடியும். ஸ்கைப் பயனர்கள் கட்டணம் செல்லுத்தி பன்னாட்டு மற்றும் உள்ளூர் அழைப்புகளை மேற்கொள்ளமுடியும் இச்சேவையை ஸ்கைப் அவுட்(SkypeOut) எனக் கூறுவர். இது மாத்திரமன்றி நிலம்வழி கம்பி-வடம் வழியாக இயங்கும் தொலைபேசியில் இருந்து ஸ்கைப்பிற்கும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும் இது ஸ்கைப் இன் (SkypeIn) என்றழைக்கப் படுகின்றது.
செப்டம்பர் 2005 இல் eBay நிறுவனமானது 2.5 பில்லியன் யூரோக்கள் பணம் மற்றும் சொத்துக்கள் தந்து ஸ்கைப் நிறுவனத்தை வாங்கியது. ஸ்கைப் விரைவாக வளரும் ஒரு நிறுவனம்.நாளொன்றுக்கு 150,000 புதுப்பயனர்களை ஈர்த்துக்கொண்டு வருகின்றது என அறியப்படுகின்றது.
http://www.skype.com
No comments:
Post a Comment