Wednesday, November 14, 2007

வைரஸ் பிரச்சினைக்கு தீர்வாகும் AVG

வணக்கம் இப்ப எல்லோருக்கும் கணணியில் வைரஸ் பெரும் பிரச்சினை கொடுக்குது.பெரும்பாலனோர் அடிக்கடி Formate செய்வினம்.அதால Hard disk இழந்தோர் நிறையப்பேர்.இதற்கு தான் ஒரே வழி Anti virus software.நீங்க அதை முறையாக Update செய்யாததுதான் உங்கட கணணியை தாக்க காரணம்.வேகமாக இயங்க கூடிய AVG anti virus software பரவாலாக இப்ப பாவிக்கினம்.நான் அதைதான் பயன்படுத்திறன்.அதைபற்றி கொஞ்ச தகவலை தேடி எடுத்துதாறன் வாசியுங்கோவன்.

AVG Anti-Virus(இதில் AVG என்பது Anti Virus Guard) மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களுக்கான பல்வேறு பட்ட நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருட்களின் தொகுப்பு ஆகும்.
ஏவிஜி 1991 இல் Grisoft இனால் உருவாக்கபட்ட மென்பொருளாகும்.

செப்டெம்பர் 2005 இல் பங்குகளின் பெரும்பகுதியானது இண்டெலினால் வாங்கப்பட்டது. ஏப்ரல் 19 2006 ewido நெட்வேக் Grisoft குழுவின் ஓர் அங்கம் ஆகியது.

நவம்பர் 6, 2006 மைக்ரோசாப்ட் ஏவிஜி பாதுகாப்பு மென்பொருட்கள் விண்டோஸ் செக்கியூரிட்டி center ஊடாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும் என அறிவித்தது.

இலவச AVG Anti-virus 7.5

AVG Free edition, வீட்டுப் பாவனைக்காக எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி எத்தனை தடவையும் மேம்படுத்தல்கள் உட்படப் பாவிக்கூடிய ஓர் இலவச மென்பொருளாகும். இதை வர்த்தக ரீதியாகப் பாவிப்பது சட்டவிரோதமானதாகும்.

எல்லா Grisoft பதிப்புகளுமே சோதனைக்காப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடியவை இவை 30 நாட்களில் காலவதியாகி விடும் பின்னர் அனுமதியைப் பெற்றுப் பயன்படுத்தலாம்..

AVG இல் ஏனைய பொதுவான நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருட்கள் போலவே காலத்திற்குக் காலம் கிரமமாக கோப்புக்களை பரிசோதித்தல்,SMTP ஊடாக வெளிச்செல்லும் மற்றும் POP3 ஊடாக உள்வரும் மின்னஞ்சல்களை Scane செய்து தேர்வுக்குரிய Scane செய்யபட்டது என்றாவாறு காட்சியளிக்கும் சொற்பிரயோகத்தையும் சேர்த்துக் கொள்ளும் வசதி.அத்துடன் ஏதாவது வைரஸ் காணப்பட்டால் அதை சுகப்படுத்தவோ முடியாவிட்டால் வைரஸ் vault(virus vault) என்கின்ற கோப்புறைக்குள் பாதுக்காப்பாகச் சேமிக்கப்படும்.
Gresoft அறிக்கையின் படி இலவசப் பயனர்கள் உட்பட 40 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் Gresoft வைரஸ் பாதுகாப்பு மென்பொருட்களைப் பாவிக்கின்றனர். சிநெட் இணையத்தளத்தில் இதை 14 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

AVGன் இலவசப் பதிப்பு வர்தகப் பதிப்பை ஒத்திருந்தாலும் கூட வர்தகப் பதிப்பில் உள்ள வசதிகள் யாவும் இதில் கிடையாது. எவ்வாறு வைரஸ் ஸ்கான் செய்யப்படவேண்டும் என்பதைத் துல்லியமாகக் கூறமுடியாது அத்துடன் இம்மென்பொருளில் இடைமுகமானது ஆங்கிலத்தில் மாத்திரமே உண்டு புரொபெஷனல் பல்வேறுபட்ட ஐரோப்பிய மொழிகளை ஆதரித்தாலும் தமிழ் உட்பட இந்திய மொழிகள் ஏதும் இதுவரை கிடையாது.

Gresoft உடனடியான தொழில்நுட்ப உதவிகளை பணம்செலுத்திய பயனர்களு மாத்திரமே அளிககப்படும் இலவசப்பதிப்பில் தொழில்நுட்ப உதவிகள் எதனையும் Gresoft வழங்காது என்றாலும் Gresoft இணையத்தளத்திலேயே சமூகத்தால் உருவாக்கப்பட்டுள்ள விவாதமேடையில் இதன் விடயங்களை இலவசமாக விவாதிக்கலாம்.

No comments: