Wednesday, October 31, 2007

வியக்க வைக்கும் google-3


கூகிள் என்பது அமெரிக்காவிலுள்ள ஓர் நிறுவனம் இதுவே கூகிள் தேடுபொறியைப் பராமரித்து வருகின்றது. இந்நிறுவனத்தில் ஏறத்தாழ 5, 700 பேர்வரை பணிபுரிகின்றனர்.

கூகிள் சேவைகள் யாவும் வழங்கிப் பண்ணைகளிலேயே(en:Server farm)இயங்குகின்றன. இவை மலிவான ஆயிரக்கணக்கான கணினிகளில் சற்றே பளு குறைக்கப் பட்ட லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகின்றன. இந்த நிறுவனமானது கணினிகளின் எண்ணிக்கை பற்றி எதுவும் கூறாத போதும் 2005ஆம் ஆண்டில் 100, 000 லினக்ஸ் கணினிகள் மூலம் இயங்குவதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

ஆரம்பம்1996 ஆம் ஆண்டு ஜனவரியில் ஓர் ஆய்வு முயற்சியாக லாரி பேஜ் (en:Larry Page) மற்றும் சேர்ஜே பிரின் (en:Sergey Brin கலாநிதிப் படிப்பிற்காக கலிபோர்னியா ஸ்ராண்ட்போட் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப் பட்டது. இது அப்போதிருந்த தேடுபொறிகளைப் போலல்லாது எத்தனை முறை தேடும் சொல்லானது அப்பக்கதிலிருகின்றது என்று கருதாமல் தேடுபொறியானது இணையப் பக்கதிற்கான தொடர்புகளை ஆராயவேண்டும் என்று கருதி ஆய்வுகளில் ஈடுபட்டனர். இது ஆரம்பத்தில் பக்ரப் ("BackRub") என்றழைக்கப் பட்டது ஏனெனில் இது எத்தனை பக்கங்கள் இந்த இணையப் பக்கங்களை இணைகின்றத என்பது கணக்கெடுக்கப் பட்டது.

கூடுதலான இணைப்புள்ள பக்கமே கூடுதலான பொருத்தாமான பக்கம் தேடல் முடிவுகளில் இதைப் பிரயோகிக்கலாம் என்ற நம்பிக்கையில் தமது கலாநிதி ஆய்வுக் கட்டுரையைப் பல்கலைக் கழகத்திற்குச் சமர்ப்பித்தனர். பேஜ் மற்றும் பிறின் ஆய்வுகளே கூகிள் தேடுபொறியின் அடிக்கல்லாக அமைந்தது. ஆரம்பத்தில் கூகிள் தேடுபொறியானது google.stanford.edu. google.com டொமைன் ஆனது செப்டம்பர் 14, 1997 இல் பதிவு செய்யப்பட்டு கூகிள் செப்டம்பர் 7, 1998 இல் ஒன்றிணைக்கப் பட்ட நிறுவனமாக நண்பர் ஒருவரின் கார்த் தரிப்பிடத்தில் உருவாகியது. சண் மைக்ரோசிஸ்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஆண்டியின் 1 இலட்சம் அமெரிக்க டாலர் உதவியுடன் மொத்த முதலீடு 1.1 மில்லியனிற்கு அளவில் இருந்தது.

Monday, October 22, 2007

கணனி wallpapers

நான் மாதம் இருதடவை என் கணனியின் முகப்பில் உள்ள wallpaperஜ மாற்றுவேன். அதற்காக இணையம் உலாவும் போது அழகான படங்களை சுடுவது வழக்கம். ஆனால் என்ன அவை அனைத்திலுமே அந்த இணையப்பக்கத்தின் இணைய முகவரி எழுதப்பட்டிருக்கும். :-( ஆனால் அண்மையில் இத்தளத்திற்கு(www.wallpapers1.com) சென்றபோது கண்கவர் பல wallpapers என் கண்ணில் பட்டன. அவை எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பயன்படட்டும் என நினைத்தே இங்கே பதிகிறேன்.

வர்ண மொழி

இன்று என்ர நண்பர்களுடன் வர்ண மொழி கண்காட்சி பார்ப்பம் என்டு மருதனார்மடம் இராமநாதன் நுண்கலைப்பீடத்திற்கு போனேன்.வாசல் வழியாக உள்நுளைந்ததும் அவர்களால் வைக்கப்பட்டிருந்த சீமெந்தினால் அமைக்கப்பட்ட சிற்பங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.அவை வெண்கல முலாம் பூசப்பட்டிருந்தன.அவற்றில் ஒன்று ஈட்டியால் மனிதன் ஒருவன் பாம்பை கொல்வது போன்று அமைக்கப்பட்டிருந்தது தத்துருபமாக இருந்தது.பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.போட்டோசொப்பை உபயோகித்து செய்த சித்திரங்களும் நன்றாக இருந்தன.மண்,சீமெந்து,கழிவுப்பொருட்களை வைத்து செய்யப்பட்ட சிற்பங்கள் மிகவும் சிறப்பாக பல விடயங்களை எடுத்து கூறுவதாக இருந்தன.சிகரட் அடிக்கட்டயை வைத்து மனித தலையை உருவாக்கி இருந்தார்கள்(யார்தான் இவ்வளவு சிகரட்டை ஊதித்தள்ளினார்களோ தெரியவில்லை). சுனாமியால் இறந்த ஒரு குழந்தயை காகம்,நாய் குதறுவது போல உருவகிக்கப்பட்ட சீமெந்தினால் ஆன சிற்பம் மீண்டும் சுனாமியை நினைவூட்டின.யாழ்ப்பாண கலைப்படைப்புகளை ஊக்குவிக்கும் இவ்வாறான செயற்பாடுகள் வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான்.20 ரூபாவிற்கு நல்ல ஒரு பொழுதை கழித்து சிறந்த கண்காட்சி பார்த்த உணர்வுடன் வெழியேறினேன்.

Sunday, October 21, 2007

வியக்க வைக்கும் google-2


கூகிள் பக்கத்தில் கவனித்திருந்தீர்கள் என்றால் அங்குள்ள கூகிள் சின்னத்தில் செவ்வாய் கிரகப்படம் இருப்பதைக் கண்டிருக்கலாம்.
அதை கிளிக் செய்துபாருங்கள், நீங்கள் செவ்வாய் கிரகத்தை இணையம் வழியாக அடைவீர் !!!

ஆம் இது நிஜம்…இந்த இணைய முகவரிக்கு சென்று பாருங்கள்: http://www.google.com/mars/

பூமியின் செயற்கைக்கோள் புகைப்படத்தை இணையம் வழியாக அளித்த கூகிள் தற்போது
செவ்வாய் கிரக மேற்பரப்பின் செயற்கைக் கோள் படத்தையும் இணையம் வழியாக
வழங்க ஆரம்பித்துள்ளது.

Saturday, October 20, 2007

SMS மூலமாக இணையத்தில் தேடல்

இது வரை கை தொலைபேசியில் யாஹூ (Yahoo! Search) போன்ற தேடு பொறிகளை உபயோகிக்க வேண்டுமானால், GPRS வசதி தேவை, அது இல்லாமல் தேடு பொறிகளை உபயோகிக்க முடியாது. எல்லோரும் GPRS வசதி கொண்ட கை தொலைபேசியை வாங்க முடியாது, சற்று விலை அதிகம். ஆனால் யாஹூ இந்த குறையை போக்கி குறுந்தகவல்(SMS) மூலமாக இணையத்தில் தேடும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. நாம் தேட விரும்பும் தகவல் பற்றிய குறிச் சொல்லை குறுந்தகவல் மூலமாக இந்த (58242) எண்ணிற்கு அனுப்பினால், நாம் தேட விரும்பிய தகவல் குறுந்தகவலாக நமக்கு வரும். இது மிகவும் பயனுள்ள சேவை.

உலக நிகழ்வுகளும் சுவாரிசியமான படங்கள்

இங்கே உலக நிகழ்வுகளோடு ஒன்றிய சுவாரிசியமான படங்கள் பிரசுரிக்கபடுகின்றன.நீங்களும் படங்கள் அனுப்பி வைக்கலாம்.

புதிய OS ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகம்


ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் வரும் 26ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், இதற்காக ஆன்லைனில் முன்பதிவு துவங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்திற்கு (ஓஎஸ்), Mac OS x Leopard என பெயரிடப்பட்டுள்ளதாகவும், இதன் அறிமுக விலை 129 அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்பிள் நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.அடுத்தாண்டு நவீன ரக ஐ-போனை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதால், 2008 ஜூன் மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த லெப்பர்ட் OS , முன்னதாகவே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.முன்னணி நிறுவனமாக விளங்கும் ஆப்பிள் குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட ஐ-பாட், ஐ-போன்கள் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
(யாழ்ப்பணத்தில இருந்து கொண்டு இதைப்பற்றியெல்லாம் கதைக்ககூடாது என்டு சொல்லாதேங்கோ)


Thursday, October 18, 2007

நாங்கள் மறந்த குறுக்கெழுத்து.

நேற்று பழைய பத்திரிகை ஒன்றில் குறுக்கெழுத்து பார்த்தேன்.இன்றைக்கு ஏதோ குறுக்கெழுத்தை பற்றி எழுதனும் போல தோன்றிச்சிது.சில இணையப்பக்கங்களில் தேடித் தகவல்களை எடுத்து இதை எழுதிறன்.
முன்னைய காலாங்களில் யாழ்ப்பாண பத்திரிகை,கொழும்பில் இருந்து வரும் பத்திரிகைகளில் குறுக்கெழுத்து ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் இப்ப ஒரு பத்திரிகைகளிலும் காணக்கிடைப்பதில்லை.பொழுது போக்காகவும், ஒரு வித புதிர் (puzzle) போலவும் இருப்பதனால் இதற்கு கூடுதல் கிராக்கி.

New York World பத்திரிக்கை ஆசிரியர் அதில் வரும் 8 பக்க (கிறுஸ்துமஸ் ஸ்பெஷல்) நகைச்சுவை
பகுதிக்கு Arthur Wynne என்னும் பத்திரிக்கையாளரை ஒரு புதுமையான வார்த்தை வளையாட்டை
வடிவமைக்க சொன்னார். அவருக்கு தான் குழந்தையில் விளையாடிய Magic Square விளையாட்டு ஞாபகத்துக்கு வந்தது.

பெரிசா புதுமையா பண்ணா என்ன என்று தோன்றிற்று. டைமண்ட் வடிவத்தில் கொஞ்சம் பெரிசா
வடிவமைத்தார். ஒவ்வொறு வார்த்தைக்கும் ஒரு சுலபமான குறிப்பு(clue) தந்தார்.
அது டிசம்பர் 21, 1913ல் New York World ஞாயிற்றுக்கிழமை பதிப்பில் வெளிவந்தது.
இதுவே உலகின் முதல் குறுக்கெழுத்து !.
அதன் வடிவம் இங்கே


Fill in the small squares with words which agree with the following definitions.
2-3. What bargain hunters enjoy. | 6-22. What we all should be.
4-5. A written acknowledgment. | 4-26. A day dream.
6-7. Such and nothing more. | 2-11. A talon.
10-11. A bird. | 19-28 A pigeon.
14-15. Opposed to less. | F-7. Part of your head.
18-19. What this puzzle is. | 23.30. A river in Russia.
22-23. An animal of prey. | 1-32. To govern.
26-27. The close of a day. | 33-34. An aromatic plant.
28-29. To elude. | N-8. A fist.
30-31. The plural of is. | 24-31. To agree with.
8-9. To cultivate. | 3-12. Part of a ship.
12-13. A bar of wood or iron. | 20-29. One.
16-17. What artists learn to do. | 5-27. Exchanging.
20-21. Fastened.
24-25. Found on the seashore.
10-18. The fibre of the gomuti palm.


விடை:


பல உள்ளங்களை வெற்றி கொண்ட அது, இன்றும் பல பத்திரிக்கைகளில் வந்து கொண்டு இருக்கிறது. இலங்கையில மட்டும் மறந்திட்டாங்க.
பின்னர் AW குறுக்கெழுத்தை பல வடிவங்களில் முயற்சி செய்தார்(வட்ட வடிவமும் அதில் அடங்கும்),
பின்னர் (rectangle)நீள் சதுர வடிவம் நிலைத்தது.
1920ல் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குறுக்கெழுத்து பரவ தொடங்கியது. பிரபலமடைந்த குறுக்கெழுத்தின் மேல் பாடல்கள் எழுதப்பட்டது, பாடப்பட்டது. இவ்வளவு பிரபலம் அடைந்த குறுக்கெழுத்தை
New York Times நாளிதழ் மட்டும் நிராகரித்தது. பதினெட்டு வருடம் கழித்து, 1950ஆம் ஆண்டு
செப்டெம்பர் மாதம் New York Times ஒரு குறுக்கெழுத்தை வெளியிட்டது.
அன்று முதல் New York Times குறுக்கெழுத்துக்கு ஒரு 'Standard of Excellence' ஆக அது
விளங்குகிறது. இன்று வரும் குறுக்கெழுத்து குறிப்பு (clues) , சிலெடை, slang, விடுகதை போன்று பல வடிவங்களில் வருகிறது.
New York Times குறுக்கெழுத்தாசிரியர் Will Shortz, பல புதுமைகள் செய்தார்
* பில் கிளிண்டனை ஒரு முறை பேட்டி எடுக்க சென்ற போது ஒரு ஸ்பெஷல்
குறுக்கெழுத்தையும் வடிவமைத்து எடுத்துச்சென்றார். கிளிண்டன் அதை 6 நிமிடம், 54 வினாடிகளில் முடித்தார்.
* அமெரிக்க தேர்தல் நேரத்தில், குறுக்கெழுத்து நடுவில் ஒரு வார்த்தைக்கு "நாளைய தலைப்பு செய்தி" என்று Clue குடுத்தார்.அதில் அப்போது போட்டியிட்ட Clinton, Bob Dole இரண்டு பேர் பெயரும் அதில் பெருந்தும் படி செய்தார்.
* 1995 பாட்மேன் ஃபார்எவர்(Batman forever) திரைபடத்திற்கு Riddler புதிர் எழுதினார்.
* உலகில் Enigmatology(குறுக்கெழுத்து சம்மந்தமான பட்டம்)யில் டிகிரி வாங்கியிருக்கும் ஒரே நபர் இவர்தான்.
குறுக்கெழுத்து முதலில் Magic Squareலில் இருந்து வந்தது, ரோம்மில் தங்களின் பாத்திரங்கள், கதவு முதலிய
இடங்களில்
SATOR
AREPO
TENET
OPERA
ROTAS
இதை பொறித்து வைத்துள்ளார்கள். அதன் அர்த்தம் -"The Creator (or Savior) holds the working
of the spheres in his hands". இதனால் நன்மை பயக்கும் என்று அவர்களுக்கு ஒரு
நம்பிக்கை.
உலகின் பெரிய குறுக்கெழுத்து 1982 ஆம் ஆண்டு Robert என்பவரால் கனடா நாட்டில் வெளிவந்தது.
இடம்-வலம் 12,489 குறுப்புக்களும், மேலிருந்து கீழ் 13,125 குறிப்புக்களும் கொண்டது. இன்னுமும்
குறுக்கெழுத்து ரசிகர்கள் அதில் இருக்கும் 82,951 Squaresக்கு விடை கண்டுபிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்!.
References :
1. The New Webster's Crossword Puzzle Dictionary
2. http://thinks.com/crosswords/first1.htm
3. http://www.fun-with-words.com/first_crossword.html

மொழிக்கலப்பு

தமிழ் இனி மெல்ல சாகும் என்று பாரதி சொன்னது சரிதான்.யாழ்ப்பாணத்தில்தான் நன்றாக தமிழ் கதைக்கினம் என்று எல்லோரும் பெருமைப்படுவம்.ஆனால் அது கூட இல்லாமல் போயிடும் என்டு பயமாயிருக்கு.சில மொழி கலப்பை உங்களுக்கு தருகிறேன்.

சாவி - போர்த்துகீசியம்
பிரோ - பிரெஞ்சு
துட்டு - டச்சு
கோணி - இந்தி
பாப்பாளி - மலாய்
சப்போட்டா - இசுப்பானியம்
கொய்யா - பிரேசிலியன்
சுமார் - பெர்சியன்
வயது - சமற்கிருதம்
கில்லாடி - மராத்தி
ஆட்டோ - கிரேக்கம்
ரிக்ஷா - சப்பானியம்
தகவல் - அரபி
போலீஸ் - இலத்தீன்
ஏட்டு - ஆங்கிலம்
துப்பாக்கி - துருக்கி
தோட்டா - உருது

வியக்க வைக்கும் Google




நாம் எல்லோரும் Google ஒரு தேடு இயந்திரமாகத்தான் இதுவரை பயன் படுத்தியிருக்கிறோம். Google வேறு பல விஷயங்களையும் செய்கிறது.
Spell checker - spelling தெரியவில்லை என்றால் Google உள்ளிடுங்கள்.
பிழையிருப்பின் உங்களுக்கு அதுவே சரியான spelling குடுக்கும்.
யாழ்ப்பாணதில் இருக்கிறவங்க jaffna university என்று குடுத்தால் உங்கள்
கண்முன்னே Mapபை பார்க்கலாம்.

இது மட்டும் இல்லை FedEx,மூலம் ஏதாவது குரியர் அனுப்பியிருந்தால் அதன் Tracking
நம்பரை உள்ளிட்டால் அது எங்கு இருக்கிறது என்ற விபரம் தெரியும்.

இது மட்டும் இல்லை define: WWW என்றால் கூட அதற்கும் விடை கிடைக்கிறது.

இவ்வளவு இருந்தும், Googleல் "இலங்கையில் எப்ப சமாதானம்?" என்பதற்கு மட்டும் விடை கிடைக்கவில்லை!.

கண்ணுக்குள் புளு


இந்த படத்தை பாருங்கள்.ஒருவரின் கண்ணுக்குள் இருந்து நீளமான புளு எடுக்கப்பட்டது.எப்படி கண்ணுக்குள் புளு போனதென்டு யோசிக்கிறீங்கள.அவர் வீதியால் நடந்து போகேக்க கணுக்குள் ஏதோ தூசி விழுந்தது போல இருந்ததாம்.இரண்டு நாட்கள் எரிவு இருந்ததாம்.ஆனால் இவர் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் விட்டுவிட்டார்.நீண்ட காலத்தின் பின்னர் கண்ணில் ஏற்பட்ட வலி காரணமாக வைத்தியரை நாடியுள்ளர்.வைத்தியர் சிறு சத்திரசிகீச்சை மூலம் இந்த புளுவை வெளியே எடுத்தார்.கண்ணுக்குள் விளுந்த முட்டை மூலமாக இப்புளு உருவாகியுள்ளது.கவனம் கண்ணுக்குள் ஏதும் தூசு விழுந்த கவனயீனமாக இருந்து விடாதீர்கள்.

Wednesday, October 17, 2007

உலக நிகழ்வுகளும் சுவாரிசியமான படங்கள்

இங்கே உலக நிகழ்வுகளோடு ஒன்றிய சுவாரிசியமான படங்கள் பிரசுரிக்கபடுகின்றன.நீங்களும் படங்கள் அனுப்பி வைக்கலாம்.

விளையாட முதலே இப்படியென்டா விளையாடெக்க

கலைஞரின் அடுத்த தொலைக்காட்சி சேவை.


இப்ப யாழ்பாணத்தில எல்லாரும் வீடுகளுக்கு கேபிள் மூலமாகதான் தொ(ல்)லைகாட்சி சேவைகளை பெறுகின்றனர்.என்ர வீட்ட கிரிகெட் பார்க்க விடாம முழு நேரமும் சுட்டி ரிவிதான்.சண் ரிவி கலாநிதி மாறன்,தயாநிதி மாறனோட ஏற்பட்ட முறுகலோட கலைஞர்,கலைஞர் ரிவி தொடங்கினார்.இப்ப அனைத்து ரிவியும் ஒரே மாதிரியான நிகழ்ச்சியை வேறு நபர்களை வைத்து செய்கிறார்கள்.ஒன்டு பார்த்தா மற்றது பார்க்கதேவையில்லை.இப்ப அடுத்ததாக கலைஞர் ரிவியினர் 24மணி நேர இசை(இசையருவி) மற்றும் 24மணி நேர செய்தி சேவையும் தொடங்க போறாங்களாம்.சன் டிவிக்கு நிகராக கலைஞர் டிவிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாமகவின் மக்கள் டிவியைப் போலவே கலைஞர் டிவியும் முடிந்தவரை நல்ல தமிழ் என்ற பாணியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.எல்லா நிகழ்சிக்கும் தமிழ் பெயர் வைத்து கலைஞர் தன்ர தமிழ்ப்பற்ற காட்டுறார்.இது வரவேற்க படவேண்டிய விடயம். இப்ப ஒன்டே பார்க்க நேரமில்லை.யாழ்ப்பணச்சனம் கேபிள்காற்ர் காசு வாங்க வரேக்க பிள்ளைகள் படிக்கிதில்லை சுட்டி ரிவியை நிப்பாட்டுங்கோ,ஆன சண்ரிவியை மட்டும் நிப்பட்டாதேங்கோ(கோலங்கள் பார்க்கணும்)என்டு சொல்லிறதை கேட்டா சிரிப்புதான் வருகிது.

அல்கோர், ஐ.நா.சுற்றுச்சூழல் அமைப்புக்கு நோபல் சமாதானப் பரிசு


உங்களுக்கு தெரியும் அல்பிரட் நோர்பல் டைனமைட் கண்டுபிடிச்சார்.பின்னர் அது அழிவுப்பாதையில் உபயோகிக்கப்படுவதை பார்த்து,அதிலிருந்து உழைச்ச பணத்தை சுவிஸ் வங்கியில வைப்பிட்டு,அதிலிருந்து வாற பணத்திலிருந்து நோபல் பரிசு வழங்க உதரவிட்டு மறைந்தார்.இந்த ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல்கோருக்கும் ஐ.நா.சுற்றுச்சூழல் அமைப்புக்கும் வழங்கப்பட்டுள்ளது. நோர்வே நோபல் குழு இந்த ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசை அறிவித்தது. புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பாதிப்புப் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காகவும் அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல்கோருக்கும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் அங்கம் வகிக்கும் ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்புக்கும் (ஐ.பி.சி.சி.) நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ரூபா 16 கோடி மதிப்புள்ள இந்தப் பரிசை இருவரும் பகிர்ந்து கொள்வர். இதுபற்றி நோபல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனிமனிதராக பல்வேறு பணிகளைச் ெசய்துள்ளார் அல்கோர். சுற்றுச்சூழல் பற்றி உலகின் பல்வேறு பகுதிகளில் அவர் உரை நிகழ்த்தி வருகிறார். புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பாதிப்பை விளக்கும் ஆவணப் படம் ஒன்றையும் அவர் தயாரித்தார். பார்பம் இலங்கையில எப்ப யர்ருக்கு கிடைக்க போகிதென்டு.நீங்களும் முயற்சி எடுங்கோ.

கரும்பு உதயம்

இது எனது புது முயற்சி.எனக்கு நீண்ட நாள் ஆசை இப்படி ஒரு இணயம் தொடங்க வேணும் எண்டு.ஆனால் அதுக்கான நேரம் கிடைக்கேல்ல.இப்ப கம்பஸ் விடுமுறை.எனவே இதை தொடங்கிறன்.இதுக்கு துண்டுகோல இருந்தது என்ர நண்பன் பகி.அவன்ர இணையத்தை பார்த்துதான் இதை தொடங்க ஆசை வந்தது.அதுக்கு அவனுக்கு நன்றி.உங்களுக்கே தெரியும் யாழ்ப்பாண்த்தில இருந்து இப்படியான இணயப்பக்கங்கள் வாறது குறைவு.தொடர்ந்து செய்து பார்ப்பம்.உங்கட கருத்துகளும்,உங்கட ஆதரவும்தான் இதுக்கு உதவும்.
நன்றி

வித்தியாசமான பரீட்சை.

இப்படி பரீட்சை வைத்தா நாங்களும் நூறு எடுப்பமெல்ல.


ஆனா அது கூட கொஞ்சம் கஸ்ரமா இருக்குது என்டு முனு முனுக்கிற கேட்கிது.

அரட்டை

இணையாத்தினூடாக அரட்டை அடிக்கிற என்டா எல்லாருக்கும் அலாதி பிரியம்.
இன்சயும் பாருன்க எப்படி அரட்டை என்டு.

பிரிட்டிஷ் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

இலக்கியத்திற்கான இந்த வருட நோபல் பரிசை பிரிட்டிஷ் எழுத்தாளர் டோரிஸ் லெஸ்சிங் பெற்றுள்ளார். இந்த தகவலை சுவீடன் அகடமி அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, டோரிஸ் லெஸ் சிங்கிற்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வயது 87. `பெண்களின் அனுபவத்தை எழுதுவதில் வல்லவர். தற்போதைய பிளவுபட்ட நாகரிகம் குறித்து மிகத் தெளிவாக ஆராய்ச்சி செய்துள்ளார்’ என்று சுவீடன் அகடமி கூறியுள்ளது.

கல்லோ கல்லு

எப்படி இந்த கல்லு நிக்குதென்று பாருங்கோவன்
நீங்களும் வீட்ட வேலை வெட்டி இல்லாமல் இருந்தா அடுக்கி பாருங்கோவன்




உலக நிகழ்வுகளும் படங்களும்.

கடந்த சில வாரங்களில் நடைபெற்ற நிகழ்வுகளும் படங்களும்.






படத்தில் சொடுக்கி பெரிதாக்கியும் பார்க்கலாம்.